1 January 2013

சொற்களஞ்சியம் அறிமுகம்


அறிமுகவுரை

தமிழர்களின் பண்டைய வரலாறு, இலக்கியம், பண்பாடு, கலைகள் உள்ளிட்ட நூல்கள் வெறுமனே சங்ககால வாழ்க்கை முறைகளை சொல்லாமல் மனிதனின் தேவைகளையும் அவற்றை அடையும் வழிமுறைகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இன்றளவில் மெள்ளத் தமிழ் இனிச் சாகும் என்ற பாரதியின் கூற்றுக்கு தமிழ்நாடு ஒரு சிறந்த உதாரணமாகவே திகழ்கிறது. நம் தமிழ் மக்கள் தாய் மொழியை முற்றிலும் மறந்து சிந்தனையை தொலைத்தவர்களாக மாறிவருகின்றனர்.

என்னதான் தமிழர்கள் உலகெங்கும் பரவியிருந்தாலும் சங்கத் தமிழ் தமிழ்நாட்டிற்கே உரித்தான மொழியாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்தனை என்பது அவன் தாய்மொழியிலே தான் வரும். செயற்கரிய செயல்களை செய்ய சிந்தனை மட்டுமே வழிவகுக்கும்.

இன்றைய நடைமுறைக் கல்வி முறையில் தமிழ் செய்யுள்கள் உரைநடையாகவும், நாடகமாகவும்,கட்டுரையாகவும், புதினமாகவும், கவிதையாகவும், இன்னும் பிறவுமுமாய் மாறி உருப்பெறாமல் போய்விட்டது. இருப்பினும் நம்மைக் காட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் மரபுகளையும், பண்பாட்டையும் பின்பற்றுகின்றனர்.

இவ் வலைப்பூவின் நோக்கம் உலகெங்கும் வாழும் தமிழ்ப்பற்று உள்ள அனைவருக்கும், தமிழ் மொழியைப் பற்றி ( கற்றல், கேட்டல், படித்தல், தொகுத்தல் வாயிலாக ) எம் சிற்றறிவுக்கு எட்டியதை அவர்களுக்கு அளிக்கும் சிறிய முயற்சி.



2 comments:

  1. மெல்ல இனி தமிழ் சாகும் -- Though Bharathi have mentioned so, it is not in the context it has been mentioned in this essay. please correct it..try to understand in full context ....

    ReplyDelete
  2. 'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே - அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை (9)

    சொல்லவும் கூடுவதில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
    மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்' (10)

    என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
    இந்த வசையெனக் கெய்திடலாமோ?
    சென்றிடு வீர் எட்டுத் திக்கும் - கலைச்
    செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! (11)

    தந்தை அருள் வலியாலும் - இன்று
    சார்ந்த புலவர் தவ வலியாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். (12)

    ReplyDelete

Thanks for your comment!