மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழும் நீ,
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே,
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே,
பொன்னும் நீ பொருளும் நீ யிருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும் நீ
யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகளீன்ற வப்பனே
என் குறைகளார்க்குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!
Good Work..keep Documenting...
ReplyDelete