காயாமுன் மரமீது பூபிஞ்
சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள்பறித்தே
வயிறெரித்தனோ
கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக்
கென்னவினை செய்தனோ
தந்தபொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்து
கொலைகளவு செய்தனோ
தவசிகளை யேசினேனோ,
வாயாரப் பொய்சொல்லி
வீண்பொருள் பறித்தனோ
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலே பிறரைச் சேர்க்கா
தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபி யென்றே
பெயரெடுத்தனோ
யெல்லாம் பொறுத் தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே
யெனையீன்ற தில்லைவாழ்
நடராஜனே!
No comments:
Post a Comment
Thanks for your comment!