4 January 2013

நடராஜப்பத்து-02

 
மானாட மழுவாட மதியாட புனலாட
 
மங்கை சிவகாமி யாட,
 
மாலாட நூலாட மறையாட திறையாட
 
மறைதந்த பிரம்மனாட,
 
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட
 
குஞ்சர முகத்தனாட,
 
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட
 
குழந்தை முருகேசனாட,
 
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனி
 
யட்ட பாலகருமாட,
 
நரை தும்பை யருகாட நந்தி வாகனமாட
 
நாட்டியப் பெண்களாட,
 
வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
 
விருதோடு ஆடி வருவாய்,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

No comments:

Post a Comment

Thanks for your comment!