5 January 2013

நடராஜப்பத்து-03

 
கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருகொண்டு
 
கனவென்ற வாழ்வை நம்பி,
 
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
 
கட்டுண்டு நித்த நித்தம்,
 
உடலென்ற கும்பிக்கு உணவென்ற யிரைதேடி
 
ஓயாமலிரவு பகலும்,
 
உண்டுண் டுறங்குவதைக் கண்டதே யல்லாது
 
ஒருபயனும் அடைந்திலேனை,
 
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்க ளெனும்
 
தாபரப் பின்னலிட்டு,
 
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
 
தமியேனை யிவ்வண்ணமாய்,
 
இடையென்று கடைநின்று யேனென்று கேளா
 
திருப்ப துன்னழகாகுமோ,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

No comments:

Post a Comment

Thanks for your comment!