தாயா ரிருந்தென்ன தந்தையு
மிருந்தென்ன
தன்பிறவி யுறவு கோடி,
தனமலை குவித்தென்ன கனபெய
ரெடுத்தென்ன
தாரணியை யாண்டுமென்ன,
சேயர்களிருந்தென்ன குருவா
யிருந்தென்ன
சீஷர்களிருந்துமென்ன,
சித்துபல கற்றென்ன
நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்ன
பலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ யிதுவெலாம்
தந்தையுற வென்று
தான் உன்னிரு பாதம்
பிடித்தேன்,
யார்மீது வுன்மன
மிருந்தாலும் உன் கடைக்
கண் பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே
யெனையீன்ற தில்லைவாழ்
நடராஜனே!
No comments:
Post a Comment
Thanks for your comment!