7 January 2013

நடராஜப்பத்து-05

 
நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்
 
செவியென்ன மந்தமுண்டோ,
 
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின்
 
நோக்காத தந்தையுண்டோ!
 
சந்ததமும் தஞ்சமென் றடியைப் பிடித்தபின்
 
தளராத நெஞ்சமுண்டோ,
 
தந்திமுக னறுமுகன் இருபிள்ளை யில்லையோ
 
தந்தை நீ மலடுதானோ,
 
விந்தையும் ஜாலமும் உன்னிட மிருக்குதே
 
வினையொன்று மறிகிலேனே,
 
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதல்
 
வேடிக்கை இதுவல்லவோ,
 
இந்தவுலகீரேழு மேனளித்தாய் சொல்லும்
 
இனியுன்னை விடுவதில்லை,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

No comments:

Post a Comment

Thanks for your comment!