6 January 2013

நடராஜப்பத்து-04

 
பம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணந்
 
தம்பனம் வசியமல்ல,
 
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
 
மதுவல்ல ஜாலமல்ல,
 
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல
 
ஆகாய குளிகையல்ல,
 
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல
 
அரியமோ கனமுமல்ல,
 
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி
 
கொங்கணர் புலிப்பாணியும்,
 
கோரக்கர் வள்ளுவர் போகமுனி யிவரெலாங்
 
கூறிடும் வைத்தியமல்ல,
 
என்மன துன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
 
வேதுளவு புகல வருவாய்,
 
ஈசனே சிவகாமி நேசனே
 
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

No comments:

Post a Comment

Thanks for your comment!